நடைப்பயிற்சி தெரியும்… ‘விறு விறு’ நடைப் பயிற்சி தெரியுமா..!? நடங்க ;நல்லா இருங்க 

 

நடைப்பயிற்சி தெரியும்… ‘விறு விறு’ நடைப் பயிற்சி தெரியுமா..!? நடங்க ;நல்லா இருங்க 

தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்க்கை சூழலில் எங்கிருந்து வாக்கிங் லாம் போறதுன்னு யோசிக்கிறீர்களா? அப்டீன்னா நீங்க மெதுவா உங்க உடலின் வலுவை இழக்குறீங்கன்னு அர்த்தம்! 

அதிக நேரம் உங்கள் குடும்பத்திற்காக உழைக்கும் நீங்கள் உங்கள் உடலுக்காகவும் கொஞ்சம் உழைக்க வேண்டும். உங்கள் தினசரி நேரத்தில் உங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவில்லையென்றால் நீங்கள் பார்க்கும் ஆபிஸ் வேலைகளை உற்சாகமாகப் பார்க்க முடியாது.

தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்க்கை சூழலில் எங்கிருந்து வாக்கிங் லாம் போறதுன்னு யோசிக்கிறீர்களா? அப்டீன்னா நீங்க மெதுவா உங்க உடலின் வலுவை இழக்குறீங்கன்னு அர்த்தம்! 

walking

அதிக நேரம் உங்கள் குடும்பத்திற்காக உழைக்கும் நீங்கள் உங்கள் உடலுக்காகவும் கொஞ்சம் உழைக்க வேண்டும். உங்கள் தினசரி நேரத்தில் உங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவில்லையென்றால் நீங்கள் பார்க்கும் ஆபிஸ் வேலைகளை உற்சாகமாகப் பார்க்க முடியாது.எந்த வேலைகளைச் செய்தாலும் சீக்கிரமே சோர்வடைந்து விடுவீர்கள்.‘உடலையும் மனதையும் ஆரோக்கியமா வச்சுக்கணும் என்றால் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி’ ஒன்றே அதற்கான தீர்வு  அதென்ன சுறுப்பான நடைப்பயிற்சி என்று கேக்குறீங்களா?அடுத்த பாராவுக்கு போங்க..

பயமுறுத்தக்கூடிய  பெரிய உபகரங்கள் எதுவும் இதற்கு தேவையில்லை, ஒரு ஜோடி நல்ல ஷூ மட்டும் இருந்தால் போதும் உங்கள் உடலையும் மனதையும் வலுவாக்க! இந்த பயிற்சியின் நோக்கமே உங்கள் இதயத்தையும், நுரையீரலையும் பாஸ்ட்டாக செயல்படுத்துவதே. விறுவிறுவென்று நடப்பதால் நீங்கள் அதிகமாக வியர்வை வடிப்பீர்கள், இதுவே ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாக அமைகிறது! இதற்காக நீங்கள் ஒரு தனி அட்டவனையோ காலமோ ஒதுக்க வேண்டியதில்லை எப்போது நேரம் கிடைத்தாலும் இந்த விறு விறு நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். 

 

speed walking

விறு விறு நடைப்பயிற்சியை எப்படி செய்வது?

பொதுவாகவே, விறு விறு நடைப்பயிற்சி என்றால் நீங்கள் சாதாரணமாக நடைபாதைக்காட்டிலும் இன்னும் சற்று வேகமாக நடப்பது அன்று. இதில் முக்கிய பங்கு வகிப்பது உங்கள் ‘இதய துடிப்பு’ நீங்கள் நடக்கும்போது உங்கள் இதயத்தின் துடிப்பையும் வேகத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் படி, உங்கள் மிதமான உடற்பயிற்சியின் போது  இதய துடிப்பு 50 – 70 சதவிகிதம் இருக்கவேண்டும். அதேப்போல, கடினமான பயிற்சியின் போது இதய துடிப்பு 70 -85 சதவிகிதாமாக இருக்கவேண்டும். இதுவே சராசரியான இதய துடிப்பாகும்.

உங்கள் இதய துடிப்பை கணிக்கிடுவதற்கு உங்கள் ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் உங்கள் மணிக்கட்டின் மீது வைத்து பார்ப்பதன் மூலம் உங்கள் துப்பின் எண்ணிக்கையை கணக்கிடலாம். அதிகபட்சமாக ஒருவரின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 220 இருக்கலாம்(உங்கள் வயதை ஆண்டுகளில்  மைனஸ் செய்துகொள்ளுங்கள்). மேலும் 30 வயதுடைய நபருக்கு இலக்கு 95-162 BPM இருக்கவேண்டும்.

speed walking

மேலும் நீங்கள் நடக்கும்போது பேசிப்பார்த்தும் உங்கள் துடிப்பை கணித்துக்கொள்ளலாம் உதாரணமாக நீங்கள் நடந்து கொண்டிருக்கும்போது பேசிப்பார்த்தால் அது புரிகிற விதத்தில் தெளிவாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். அல்லது உங்களுக்கு பேசவே முடியாமல் மூச்சு அதிகமாய் இருந்தால் நீங்கள் அதிக வேகத்துடன் நடக்குறீர்கள் என்று  அர்த்தம். 

இதன் நன்மைகள்:

walking

உடற்பயிற்சி எப்போதுமே உடல் குறைப்பையும், எடை குறைத்தலையும் உறுதிப்படுத்துகிறது. அதேபோலவே, விறு விறு நடைப்பயிற்சியும் இதயத்திற்கு  நன்மைகளை பயக்கும். இதனால் உங்கள் தேவையற்ற கலோரிகளை எரிக்கிறீங்கள் இறுதியில் ஓரு ஆரோக்கியமான வாழ்வை பெறுகிறீர்கள். இது குறித்து மருத்துவர்கள் பேசும்போது ‘தினமும் அல்லது வாரத்தில் 5 நாட்கள் தவறாமல் விறு விறு நடைபயிற்சியினை மேற்கொண்டால் இதய நோய்கள், மன நோய்கள் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும்’என்கிறார்கள்.

இனிமே, ‘விறு விறு’வென்று நடையைப் போடுங்க… ஆரோக்கியத்தை உங்க கண்ட்ரோலில் வையுங்க.