நடுவானில் மாணவர்களுடன் நடிகர் சூர்யா…’வெய்யோன் சில்லி’ பாடல் வெளியானது!

 

நடுவானில் மாணவர்களுடன் நடிகர் சூர்யா…’வெய்யோன் சில்லி’ பாடல் வெளியானது!

என்.ஜி.கே, காப்பான் படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று.

என்.ஜி.கே, காப்பான் படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துவருகிறார்.

ttn

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

ttn

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர்  ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின்  போஸ்டர்கள் மற்றும்  டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது. இதையடுத்து இப்படத்தின்  மாறா என்ற தீம் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

ttn

இந்தப் படத்துக்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று வெய்யோன் சில்லி என்ற பாடலை நடுவானில் பறக்கும் விமானத்தில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்தது. அதன்படி வெய்யோன் சில்லி பாடல் தற்போது வெளியாகி  மாஸான  வரவேற்பை  பெற்றுள்ளது. 

முன்னதாக அரசு பள்ளி மாணவர்கள் நூறு பேருடன் நடிகர் சூர்யா விமானத்தில் பறக்க ஆயுத்தமானார். அப்போது சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்தது.

ttn

சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.