நடுரோட்டில் கம்பீரமாய் நடந்து வந்த 4 சிங்கங்கள்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி; வைரல் வீடியோ!

 

நடுரோட்டில் கம்பீரமாய்  நடந்து வந்த 4 சிங்கங்கள்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி; வைரல் வீடியோ!

பட்டப்பகலில் சாலையில்  வாகனங்களுக்கு நடுவே 4 சிங்கங்கள் கம்பீரமாக நடந்து செல்லும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா: பட்டப்பகலில் சாலையில்  வாகனங்களுக்கு நடுவே 4 சிங்கங்கள் கம்பீரமாக நடந்து செல்லும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

lion

தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள க்ரூகெர் தேசிய வனவிலங்குப் பூங்காவை ஒட்டிய சாலையில் பரபரப்பாகச்  வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த சாலையில் சிங்கங்கள் குறுக்கிட்டன.

4 சிங்கங்களும் கம்பீரமாக சாலையில் நடந்து வர  அவற்றின் பின்னே வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து வருகின்றன.  இந்த காட்சியானது அந்த வழியாகச் சென்றவர்களால் எடுக்கப்பட்டு இணையதளத்தில்  பதிவேற்றப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும் இந்த வீடியோ சமூகவலைதளவாசிகளால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.