நடுத்தர ஐ.டி. நிறுவனம்தான்…. ஆனாலும் வருவாயில் குறைவைக்காத பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ்..

 

நடுத்தர  ஐ.டி. நிறுவனம்தான்…. ஆனாலும் வருவாயில் குறைவைக்காத பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ்..

பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.320.28 கோடி ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் 5.9 சதவீதம் அதிகரித்து ரூ.3,565.80 கோடியாக உயர்ந்து இருந்தது.

ஐ.டி. துறையை சேர்ந்த நடுத்தர நிறுவனம் பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ். இந்நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதியாண்டில் (2019-20) நிகர லாபமாக ரூ.320.28 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 3.4 சதவீதம் குறைவாகும். மேலும் கடந்த நிதியாண்டில் பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வருவாய் 5.9 சதவீதம் அதிகரித்து ரூ.3,565.80 கோடியாக உயர்ந்து இருந்தது.

பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் அலுவலகம்

கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.83.82 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 0.8 சதவீதம் குறைவாகும். இருப்பினும் அந்த காலாண்டில் பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வருவாய் 11.4 சதவீதம் அதிகரித்து ரூ.926.36 கோடியாக உயர்ந்தது. 

பணம்

பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டோபர் ஓ’கார்னர் நிதிநிலை முடிவுகள் குறித்து கூறுகையில், 2019-20 நிதியாண்டை நாங்கள் வலுவாக நிறைவு செய்துள்ளோம். எங்களது நிறுவன வரலாற்றில் முதல் முறையாக 50 லட்சம் டாலர் வருவாயை முதல் முறையாக கடந்துள்ளோம். நாங்கள் குறிப்பாக தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் வலுவாக உள்ளோம். நிலையான விரிவாக்கம் வாயிலாக அது வீரியமான காலாண்டை கொடுத்துள்ளது. கோவிட்-19 சவால்களை முன்வைத்துள்ளபோதிலும், அது வணிக வாய்ப்புகளையும் கண்டுபிடித்து வருகிறது. ஆகையால் ஒவ்வொரு நிறுவனமும் இப்போதுள்ள நிலைமை ஒரு சாத்தியமான வழி அல்ல என்பதை புரிந்து கொள்கின்றன. என தெரிவித்தார்.