நடுகாட்டுபட்டியில் சாரல் மழை: தார்ப்பாய் கொண்டு மூடி சுர்ஜித்தை காக்கும் மீட்புக் குழு..!

 

நடுகாட்டுபட்டியில் சாரல் மழை: தார்ப்பாய் கொண்டு மூடி சுர்ஜித்தை காக்கும் மீட்புக் குழு..!

17 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதால், சோர்வடைந்த சுர்ஜித் அசைவின்றி இருக்கிறான். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. 3 முறை கயிறுகட்டி மீட்டெடுக்க முயற்சி செய்தும் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது. மேலும், சிறுவன் மீது சேறு விழுந்ததால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 17 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதால், சோர்வடைந்த சுர்ஜித் அசைவின்றி இருக்கிறான். 

Surjith

மீட்புப் பணியில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு வரும் இந்நிலையில்,  நடுகாட்டுபட்டியில் லேசாகச் சாரல் மழை பெய்து வருகிறது. மழையின் வேகம் சற்று அதிகரித்தால் கூட, சிறுவனைக் காப்பாற்றுவது கடினம் ஆகி விடும். மழை நீர் உள்ளே புகாமல் இருக்க மீட்புக் குழுவினர் தார்ப்பாய் கொண்டு அந்த ஆழ்துளைக் கிணற்றை மூடியுள்ளனர். குழாய் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதால், சிறுவன் சுவாசிப்பதால் சிக்கல் ஏதும் ஏற்படாது என்று கூறப் படுகிறது. சீக்கிரமாக, சிறுவனைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்று தமிழகமே எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.