நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் தாயார் காலமானார்!

 

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் தாயார் காலமானார்!

நடிகை பூர்ணிமாவின் தாயாரும் இயக்குனர் பாக்கியராஜின் மாமியாரும் ஆன சுப்பலட்சுமி ஜெயராம் காலமானார்.

இந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாக இருக்கிறது. மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை உலகையே உலுக்கெடுத்து வரும் கொரோனாவால் பலர் உயிரிழக்கின்றனர். இதனிடையே பிற நோய்களாலும் மக்கள் உயிரிழப்பது அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக திரைத்துறையில் எதிர்பாராத பல இழப்புகள் நடந்தன. இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜின் மாமியார் உடல் நலக்குறைவால் காலமானார்.

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் தாயார் காலமானார்!

சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கடந்த 1984 ஆம் ஆண்டு பிரபல நடிகையான பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். பூர்ணிமாவின் தாயார் சுப்பலட்சுமி ஜெயராம். இவருக்கு வயது 85. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சுப்பலட்சுமி ஜெயராமின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது. மேலும், இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.