நடிகை ஜோதிகா குறிப்பிட்ட மருத்துவமனையில் பிடிக்கப்பட்ட கொடிய விஷமுள்ள 10 பாம்புகள்.. ஊழியரை கடித்தால் பரபரப்பு!

 

நடிகை ஜோதிகா குறிப்பிட்ட மருத்துவமனையில் பிடிக்கப்பட்ட கொடிய விஷமுள்ள 10 பாம்புகள்.. ஊழியரை கடித்தால் பரபரப்பு!

ஜோதிகாவின் பேச்சு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. அதனை பராமரிக்க பணம் கொடுக்கிறீர்கள். அதே போல பள்ளிகளுக்கும் கொடுங்கள், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். அவை மிகவும் முக்கியம். தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் முறையான பராமரிப்பு இல்லாததால் மிகவும் மோசமாக இருக்கிறது என்று கூறினார். அந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவிய நிலையில், ஜோதிகாவின் பேச்சு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

ttn

இந்நிலையில் முறையாக பராமரிக்கப்படவில்லை என ஜோதிகா சுட்டிக் காட்டிய  தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியரை பாம்பு கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைப்பற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், அம்மருத்துவமனையில் உள்ள அனைத்து பாம்புகளையும் பிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

ttn

அதன் படி மருத்துவமனை வளாகத்தில் பாம்பு பிடிக்கும் பணி நடைபெற்று இருக்கிறது. அங்கு வனத்துறையினர் ஜே.சி.பி கொண்டு சுத்தம் செய்த போது, கொடிய விஷமுள்ள 5 கட்டுவிரியன் பாம்பு உட்பட 10 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. வேறு ஏதேனும் பாம்புகள் இருக்கிறதா என்றும் சோதனை செய்து வருகின்றனர். இது மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.