நடிகை ஜோதிகாவின் கேள்வியில் என்ன தவறு உள்ளது? அனைவருக்கும் கருத்துரிமை இருக்கு- கி. வீரமணி

 

நடிகை ஜோதிகாவின் கேள்வியில் என்ன தவறு உள்ளது? அனைவருக்கும் கருத்துரிமை இருக்கு- கி. வீரமணி

தஞ்சை பெரிய கோவில் கட்டியதில் காட்டப்பட்ட அக்கறை மக்களின் இன்றியமையாத மருத்துவமனைகளுக்குக் காட்டாதது ஏன்? நடிகை ஜோதிகாவின் கேள்வி அர்த்தம் உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் மதவாதிகளுக்கு கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தஞ்சை பெரிய கோவில் கட்டியதில் காட்டப்பட்ட அக்கறை மக்களின் இன்றியமையாத மருத்துவமனைகளுக்குக் காட்டாதது ஏன்? நடிகை ஜோதிகாவின் கேள்வி அர்த்தம் உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் மதவாதிகளுக்கு கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, சமீபத்தில் தஞ்சாவூர் சென்றிருந்தேன். அங்குள்ள அரசு மருத்துவமனைகளை பார்த்த போது வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கொடுமையாக இருந்தது. ஆனால் அங்கு பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் சுத்தமாக இருக்கிறது. கோயில்களுக்கு கொட்டிக்கொடுக்கும் பணத்தை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார்.  ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். 

r

இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாடு ஒரு ஜனநாயக நாடு. நாட்டின் அரசாங்கங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி தான் நடைபெறக் கூடியவை – நடைபெறவேண்டும் என்பதற்காகவே மத்திய – மாநில அமைச்சர்கள்முதல் குடி யரசுத் தலைவர் வரையும், அதுபோல் நீதித்துறையின் நீதிபதிகளும், அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் பிரமாணம் எடுத்த பின்பே தத்தம் கடமைகளையாற்றுகின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாற்றப்பட முடியாத அடிக்கட்டுமானப் பகுதி (Basic Structure of the Constitution) என்பதில் மிக முக்கியமான பகுதியானது அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதாகும். அதன்படி, எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை, அனைத்து குடிமக்களுக்கும் உண்டு. இதனைப் பறிக்க எவருக்கும் எந்த அமைப்புக்கும் உரிமை இல்லை.

நம் நாட்டில் உள்ள சிலர் விளம்பரம் தேடுவதற்காகவோ அல்லது மதவெறியைப் பரப்பவோ இந்து அமைப்பு என்ற பெயரால் ஏதாவது செய்தி எங்காவது வராதா என்று கழுகுக் கண் போல் காத்திருக்கின்றனர்.ஒரு திரைப் படப்பிடிப்புக்காக தஞ்சை சென்ற நடிகை ஜோதிகா அவர்கள், அங்குள்ள அரசு (பெரிய கோவில் எதிர் வரிசையில் உள்ள) மருத்துவமனையைச் சென்று பார்த்துள்ளார்.அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனையா என்பது நடிகை ஜோதிகாவின் வேதனை. அங்கே நோயாளிகள் பகுதியை அவர் சுற்றிப் பார்த்தபோது, குழந்தைகளுக்குக்கூட உரிய இடம் ஒதுக்கி கவனிக்க முடியாமல், மக்கள் படும் கஷ்டங்களைப் பார்த்துக் கலங்கியுள்ளதால், வரலாற்று அடை யாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் இந்த பெரிய கோவில் எதிரில் இப்படி ஒரு அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவ மனையா என்பது அவரது வேதனையாக இருந்த காரணத்தினால், அக்கோவில் களுக்கு நிகரான மருத்துவமனைகள் இருக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதில் எங்கே பிழை? எப்படி இது கோவிலுக்கு எதிரானதாகும்? என்று கேட்டு, விளக்கம் கூறியுள்ளார் அந்தத் திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் அவர்கள்.

ஜோதிகா

நடிகை ஜோதிகா அவர்கள் இந்நாட்டு குடிமக்களில் ஒருவர் – அவருக்குச் சுதந்திரமாகத் தமது கருத்துகளைக் கூற முழு உரிமை உண்டு.அதனைத் திரித்துக் கூறி, உடனே அவருக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை இப்படிச் சில மதவெறியர்கள் – கண்டனம் தெரிவிப்பதில் என்ன பொருள் இருக்கிறது?தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜராஜன் காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பு எவ்வளவு மோசமானது என்பதை Hindu Manners & Customs – ‘‘இந்து மக்களின் பழக்கவழக்கங்கள்” என்ற தலைப்பில் பிரெஞ்சு பாதிரியார் ஆபே தூபே (Abbe J.A.Dobois) எழுதி 1867 இல் முதன் முதலில் வெளியான ஆங்கில நூல் தெளிவாக விளக்குகிறது. (இதற்கு முழு உதவி செய்தவர் சி.வி. முனுசாமி அய்யர் என்ற ஒரு பார்ப்பனப் பெருமகன் என்று அதிலேயே முன்னுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது).

அந்நூல் ஆசிரியர் முதல், கல்வியாளர் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்) க.ப.அற வாணன் அவர்கள் வரை பலரும், தஞ்சை இராஜராஜன் ஆட்சிபற்றியும், அதன்மூலம் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு, உயர்ஜாதிப் பார்ப் பனருக்கு மட்டுமே வாய்ப்புகளும், சதுர்வேதி மங்கலங்களும், வரி வாங்காத  நிலங்களும் வழங்கப்பட்ட வெகுமக்கள் நல விரோத நிலைப்பாட்டினை விவரித் துள்ளார்கள்! வெளியிலிருந்து 300 பெண்களைத் தஞ்சைக்குக் கொண்டு வந்து, தேவதாசி களாக ஆக்கியது உள்பட பல்வேறு நிகழ்வுகள் எப்படி பண்பாட்டுப் படை யெடுப்புக்குக் காரணமாயிற்று என்றெல் லாம் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது!

 

இவற்றைப்பற்றி விரிவாக எழுத வேண்டிய நேரமல்ல இது. மக்களின் அவதியைப் போக்க அனைவரும் ஒன்றுபட்டு, மதம், ஜாதி, கட்சி இவற்றை மறந்து அல்லது ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதநேயத்தோடு பார்க்கவேண்டிய நேரத்தில், திருமதி ஜோதிகா அவர்கள் கூறிய கருத்து நோக்கி, அதையும் கூட திரித்து இப்படி ஒரு மதவெறுப்புப் பிரச் சாரத்தைத் தொடங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில், அவர் போன்றவர்கள் மட்டுமல்ல, எவரும் உண்மைகளைக் கூறுவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி, நல்லிணக்கத்தை சிதைக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.