நடிகர் விமலை கரை சேர்க்குமா ‘சண்டைக்காரி’ படம்..!?  

 

நடிகர் விமலை கரை சேர்க்குமா ‘சண்டைக்காரி’ படம்..!?  

விமல் ஸ்ரேயா சரன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘சண்டைக்காரி’. சமீபகாலமாக தமிழில் அதிகம் தட்டுப்படாத ஸ்ரேயாவுக்கும் , வெகுகாலமாக வெற்றியைக் கண்ணில் பார்க்காமல் ஏங்கிக்கிடக்கும்  விமலுக்கும் இது ரொம்ப முக்கியமான படம்.

vimal

2012-ல் மலையாளத்தில் ‘மை பாஸ்’ என்கிற பெயரில் ரிலீஸாகி  பெரிய ஹிட்டடித்த படம் இது.இதன் ஒரிஜினல் 2009-ல் வெளிவந்த ஹாலிவுட் படமான ‘தி புரப்போசல்’. திருஷ்யம் ( பாவநாசம்) புகழ் ஜித்து ஜோசப் அதை சுட்டு, பட்டி, டிங்கரிங் பார்த்து நடிகர் திலீப்,மம்தா நடிப்பில் ‘மை பாஸ்’ என்ற பெயரில் படத்தை எடுத்திருந்தார். 

ganda

அதை அப்படியே ‘ சாஃப்ட்வேர் கண்டா’  என்கிற பெயரில் கன்னடத்தில் ரீமேக் ஆகி,அங்கும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.அதைத்தான் ரீமேக் உரிமை வாங்கி  தமிழில் ‘சண்டைக்காரி’யாக்கி படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். இந்தப் படம் விமல்,ஸ்ரேயா இருவருக்கும் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று இருவரும்  எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

vimal

கதை ? கிராமத்தில் பெரும் பணக்கார குடும்ப வாரிசான ஹீரோவுக்கும் அப்பாவுக்கும் ஆகாது. காரணம், ஹீரோவுக்கு வெளிநாட்டில் போய் செட்டிலாகும் ஆசை.அப்பாவிடம் இருந்து தப்ப ஹீரோ ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியின் பெண் சி.இ.ஒவின் செகரட்டரியாக வேலைக்கு சேர்கிறான்.அவளோ அவனை நாயை விட கேவலமாக நடத்துகிறாள்.என்.ஆர்.ஐ இந்தியளான அவளுக்கு இந்தியாவில் தங்கினால்தான் அடுத்த புரமோஷன் என்பதால் நாயகனுடன் சமாதானமாகி, அவனைத் தன் கணவனாக நடிக்க வைக்கிறாள். இதில் ஏற்படும் பிரச்சினைகளும் அவர்கள் எதிர்படும் குழப்பங்களும்தான் படம்.

vimal

ஆர்.மாதேஷ் இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படம் அடுத்தமாதம் வெளி வருகிறது. விமல், ஸ்ரேயாவுடன் சத்தியன், பிரபு, கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் தன்னைக் காப்பாற்றி விடும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார் விமல்.