நடிகர் ரஜினிகாந்த் -லதா தம்பதியின் திருமண நாள் கொண்டாட்டம்: மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து!

 

நடிகர் ரஜினிகாந்த் -லதா தம்பதியின் திருமண நாள் கொண்டாட்டம்: மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து!

70 வயதான போதிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் ரஜினி கிடைக்கும் நேரத்தில் தனது குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். 

தமிழ் திரையுலகில் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  தான். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அவர், சாதாரண பேருந்து  நடத்துநராக வாழ்க்கை தொடங்கி தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.

 

வில்லன், குணச்சித்திர வேடம், ஹீரோ என முன்னேறிய ரஜினிக்கு ஏராளமான வெற்றிகளும், விருதுகளும் கிடைத்தன. 70 வயதான போதிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் ரஜினி கிடைக்கும் நேரத்தில் தனது குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். 

 

1981 ஆம் ஆண்டு  பிப்ரவரி 26 ஆம் தேதி லதாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள்  உள்ளனர். அதில் ஐஸ்வர்யா தனுஷ் தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் லதா தம்பதி இன்று தங்கள் 39 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதுகுறித்து இவரது இளைய மகள் சௌந்தர்யா வாழ்த்து கூறி அவர்களின் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் . இதை தொடர்ந்து பலரும் ரஜினி – லதா தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.