நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்: வறுத்தெடுத்த பிரபல இயக்குநர்; காரணம் தெரியுமா?

 

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்: வறுத்தெடுத்த பிரபல இயக்குநர்; காரணம் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று (டிச.12) தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு அவரது கோடான கோடி ரசிகர்களும், திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். அதில் பெரும்பாலானோருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

அதே போல் ஊடகங்களிலும் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் கடந்து வந்த பாதை, ரசிகர்கள் கொண்டாட்டம் எனச் செய்திகள் ஒளிபரப்பாகின. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் தங்கர் பச்சான், தனது பேஸ்புக் பக்கத்தில், ‘இவர்கள் என்றைக்கு திருந்துவார்கள்? நேற்று பெருங்கவி பாரதியாரின் பிறந்தநாள் என்பதை ஒன்றிரண்டைத்தவிர பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவேயில்லை.

 

இன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் என்பதால் அவரைப்பற்றிய செய்திகளும், திரைப்படங்களும், காட்சிகளும் வெளியிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஊடகங்களை வைத்துக்கொண்டு இந்த நாட்டை எப்படி காப்பாற்றுவது? இவர்கள்தான் நாட்டை காக்கும் நான்கு தூண்களில் ஒன்று என இனியும் சொல்லிக்கொள்ளலாமா? நேர்மையான ஊடகங்கள் மட்டும் நமக்கு அமைந்தால் நல்ல நல்ல தலைவர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்!’ என்று குறிப்பிட்டிருந்தார்.