நடிகர் மோகன் லால் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட யானை தந்தங்கள்: வனத்துறை விளக்கம்!

 

நடிகர் மோகன் லால் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட யானை தந்தங்கள்: வனத்துறை விளக்கம்!

நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்த தந்தங்கள் தொடர்பாகக் கேரளா உயர் நீதிமன்றத்தில் அம்மாநில வனத்துறை விளக்கமளித்துள்ளது. 

கொச்சி: நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்த தந்தங்கள் தொடர்பாகக் கேரளா உயர் நீதிமன்றத்தில் அம்மாநில வனத்துறை விளக்கமளித்துள்ளது. 

mohan

கொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது மோகன்லால் வீட்டிலிருந்து நான்கு  யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மோகன் லால் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது மோகன்லால் தனது வீட்டில் தந்தங்களை வைத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியதாகக் கூறி அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

kerala hc

இதனிடையே அரசு வழங்கிய அனுமதிக்கு எதிராக மேலும்  ஒரு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாகக் கேரளா உயர் நீதிமன்றத்தில் அம்மாநில வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில்,  நடிகர் மோகன்லாலுக்கு  யானை தந்தங்களை வைத்துக்கொள்ள  அரசு  சட்டப்படி உரிமம் வழங்கியுள்ளது’ என்று விளக்கமளித்துள்ளது. இதனால் மோகன் லால் யானை தந்தம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.