நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணியின் வேட்பாளர்கள் அறிவிப்பு! 

 

நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணியின் வேட்பாளர்கள் அறிவிப்பு! 

நடிகர் சங்கம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சங்கம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் வென்றனர். 

அவர்களின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில், அதற்கான தேர்தல் வரும் 23-ம் தேதி  எம்.ஜி.ஆர் – ஜானகி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே பொறுப்பில் இருந்த நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி ஆகியோர் இம்முறையும் போட்டியிடுகின்றனர். 

இந்த அணி சார்பில் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அது கீழ் வருமாறு..  

1.ஸ்ரீமன்
2.பசுபதி
3.ரமணா
4.நந்தா
5.’தளபதி’தினேஷ்
6.சோனியா போஸ்
7.குட்டி பத்மினி
8.கோவை சரளா
9.பிரேம்
10.ராஜேஷ்
11.மனோபாலா
12.ஜெரால்டு
13.காளிமுத்து
14.ரத்னாப்பா
15.M.A.பிரகாஷ்
16.அஜய் ரத்தினம்
17.பிரசன்னா
18.ஜூனியர் பாலய்யா
19.ஹேம சந்திரன்
20.குஷ்பூ
21.லதா
22.நிதின் சத்தியா 
23.’பருத்திவீரன்’ சரவணன்
24.ஆதி
25.வாசுதேவன்
26.காந்தி காரைக்குடி