நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் : விஷால் தரப்பில் நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

 

நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் : விஷால் தரப்பில் நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் மாதம் நடந்த தேர்தல் செல்லாது என்று உத்தரவிட்டது.

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. அதில் பதவி வகித்து வந்த நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது. இந்த தேர்தலின் போது வெளியூரில் இருக்கும் நாடக நடிகர்களின் ஓட்டுக்கள் வந்து சேராததாலும், சில உறுப்பினர்கள் திடீரென வெளியேற்றப் பட்டதாலும் இந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் மாதம் நடந்த தேர்தல் செல்லாது என்றும் உத்தரவிட்டது.

ttn

இதனால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நடிகர் விஷால் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மனு அளித்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், இன்று மீண்டும் நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், தனி அதிகாரியை நியமித்தது செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.