நடிகர் சங்கத் தேர்தல்: விஷாலுக்கு எதிராக களமிறங்குவது இவர் தான்! 

 

நடிகர் சங்கத் தேர்தல்: விஷாலுக்கு எதிராக களமிறங்குவது இவர் தான்! 

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளார். 

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளார். 

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் வென்றனர். 
 
அவர்களின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில், அதற்கான தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர் – ஜானகி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே பொறுப்பில் இருந்த நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி ஆகியோர் இம்முறையும் போட்டியிடுகின்றனர். ஆனால் அந்த அணியிலிருந்த  உதயா, ஆர் கே சுரேஷ், ஐசரி வேலன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

ishari

இந்த நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  இதற்கிடையில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பல்வேறு சமயங்களில் விஷால் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

இதனால் அவரும் விஷாலுக்கு எதிராக களமிறங்குவார் என்று வதந்திகள் பரவியது. ஆனால் அதனை மறுத்துள்ள சுரேஷ், ‘நான் போட்டியிடப் போவதில்லை எனக்கு பதிலாக விஷாலுக்கு எதிராக எங்கள் அணியின் சார்பில் ஐசரி கணேஷ் போட்டியிடவுள்ளார்’ என்று கூறியுள்ளார்.