நடிகர் சங்கத் தேர்தலைக் கல்லூரியில் நடத்த அனுமதி மறுப்பு! தேர்தல் ரத்தாகுமா?

 

நடிகர் சங்கத் தேர்தலைக் கல்லூரியில் நடத்த அனுமதி மறுப்பு! தேர்தல் ரத்தாகுமா?

நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சென்னை: நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.

தேர்தல் நடைபெறும் நாளன்று பாதுகாப்பு வழங்க கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்தினால், மக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும், அதனால் காவல்துறை பாதுகாப்புக்கு அனுமதிக்கவில்லை. 

இதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடத்தை நாளை தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. 

இந்த குறுகிய காலத்தில் வேறு ஒரு புதிய இடம் பார்த்து தேர்தலை, அதே தேதியில் நடத்த முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.