நக்சல்கள்தான் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறார்கள்: ஹெச்.ராஜாவின் அடுத்த சர்ச்சை

 

நக்சல்கள்தான் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறார்கள்: ஹெச்.ராஜாவின் அடுத்த சர்ச்சை

உள்ளூர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிக்கிறார்கள் ஆனால் நக்சல்கள்தான் அதனை எதிர்க்கிறார்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சைகுரிய முறையில் பேசியுள்ளார்.

சேலம்: உள்ளூர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிக்கிறார்கள் ஆனால் நக்சல்கள்தான் அதனை எதிர்க்கிறார்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சைகுரிய முறையில் பேசியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட இருக்கிறது. மேலும் ஆலையை திறந்தால் போராட்டம் வெடிக்கும் என மக்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரும்புகிறார்கள். நக்சல்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறார்கள். இந்த போராட்டம் காசு கொடுத்து அர்பன் நக்சல் மூலம் நடத்தப்பட்ட போராட்டம் ஆகும். மக்கள் முன்னேற கூடாது என்று நக்சல்கள் இதை எதிர்க்கிறார்கள் என்றார்.