நகராட்சி தேர்தல் எப்போது..? அதிமுக போடும் அதிரடி ப்ளான்..!

 

நகராட்சி தேர்தல் எப்போது..? அதிமுக போடும் அதிரடி ப்ளான்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் அலர்ஜி, அதிர்ச்சியில் இருந்து இன்னும் அதிமுக தரப்பு மீளவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் அலர்ஜி, அதிர்ச்சியில் இருந்து இன்னும் அதிமுக தரப்பு மீளவில்லை. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கும் இப்போதைக்கு நிலைமை சரியில்லை. 

பாஜகவின் ஒவ்வொரு அறிவிப்பும் வட மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதை விட தமிழகத்தில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாஜக எதிர்ப்பு அலை தமிழகத்தில் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால் மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு பார்க்கலாம்.

ops

அதில் தமிழகத்திற்கு சலுகை அறிவிக்கப்பட்டால் அதை முன்னிறுத்தி நாம் தேர்தலை அறிவித்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம். அதனால் இப்போதைக்கு முடிவை நிறுத்தி வைத்து விடுங்கள் என்று மேலிடத்துக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதையே தான் ஓ.பி.எஸ் ‘’பல்வேறு பணிகள் இருப்பதால் நகர்ப்புறங்களுக்கு தனி அதிகாரி நியமித்து’’ அறிவிப்பு வெளியிட்டு இருக்க்கிறார்.