தோல் உரிந்த நிலையில் குழந்தை, தொடரும் பெண்கள் போராட்டம்; என்ன நடக்கிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில்?

தோல் உரிந்த நிலையில் குழந்தை, தொடரும் பெண்கள் போராட்டம்; என்ன நடக்கிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில்?

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள கேகே புதூரில் பெண்கள் இணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 12 நாட்களைக் கடந்த பின்பும் அந்தப் போராட்டம் யாராலும் கண்டு கொள்ளப்படவில்லை.

காஞ்சிபுரம்: மதுராந்தகம் பகுதியில் உள்ள மருத்துவ கழிவு எரிப்பு ஆலையால் அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது! இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

protest

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள கேகே புதூரில் பெண்கள் இணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 12 நாட்களைக் கடந்த பின்பும் அந்தப் போராட்டம் யாராலும் கண்டு கொள்ளப்படவில்லை.

போராட்ட நோக்கம் தங்களுக்கு கேன்சரையும், தோல் நோயையும், மலட்டுத் தன்மையையும் தரும் bio medical waste (மருத்துவ கழிவு) எரிப்பு ஆலையை இழுத்து மூட வேண்டும் என்பதுதான்.

injection

அந்த ஆலை ஏற்படுத்தும் கொடூரத்தின் சாட்சியாய் ஓர் இரண்டு வயது குழந்தையை அக்கிராம மக்கள் காட்டுகிறார்கள். குழந்தையின் உடல் முழுக்க தோல் உரிந்து பரிதாப நிலையில் தவிக்கிறது அந்த குழந்தை.

மருந்து

காலேஜ் கட்டப் போறோம்ன்னு சொல்லி ஏமாத்தி எங்க நிலத்தை பிடுங்கி இப்படி எங்களை அழிக்கிறாங்களே என கதறுகிறார் அக்குழந்தையின் தாத்தா. ஊரில் உள்ள வீடுகள் தோறும் கேன்சர் நோயாளிகள் இருக்கிறார்கள்.எனவே தங்கள் நிலத்தை மீட்க,பெரு நோய்களிடம் இருந்து தன் எதிர்கால தலைமுறையை காக்க, பெண்கள் களமிறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபடப்போவதாக அந்த கிராமத்தினர் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். 

இதையும் வாசிங்க

தேர்தலில் அதிரடி திருப்பங்களை உண்டாக்கும் அந்த வீடியோக்கள்; இன்று ரிலீசாகுமா?