தோற்கடித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி ! தேர்தல் செலவை அச்சடித்து வெளியிட்ட வேட்பாளர் !

தோற்கடித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி ! தேர்தல் செலவை அச்சடித்து வெளியிட்ட வேட்பாளர் !

ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர், தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தேர்தல் செலவு கணக்கு விவரங்களை போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர், தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தேர்தல் செலவு கணக்கு விவரங்களை போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

புதுக்கோட்டை குளந்திரான்பட்டு ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் 21 வாக்குகளில் தோல்வியடைந்தார். இதையடுத்து  தனது தேர்தல் செலவு விவரங்களை போஸ்டராகவும், நோட்டீசாகவும் அச்சியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதை கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக தகவல் பலகையில் ஓட்டியுள்ளார். 

அந்த செலவு விவரங்களில், வீட்டுவரி, பிரமாண பத்திரம், வேட்புமனுத் தாக்கல்,  நோட்டீஸ், போஸ்டர் ஓட்டுவதற்கு மைதா மாவு, கோயில் வழிபாடு பூஜை பொருட்கள், அர்ச்சனை சீட்டு, உண்டியல் காணிக்கை, வாக்கு சேகரிப்பின்போது வடை, கூல்ட்ரிங்ஸ் போன்ற மொத்தம் செலவுத் தொகை ரூ.18,481 என அந்த போஸ்டரில் பட்டியலிட்டுள்ளார். தன்னை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நன்றியும், அன்பும் தெரிவித்தும் போஸ்டரில் பதிவிட்டுள்ளார்.

வாக்காளர்கள் பணத்திற்கு விலை போனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ள துரை குணா, என்றாலும் மக்கள் என்னை ஏற்றுக் கொள்ளாததால், அரசுக்கு நாம் செய்த செலவு விவரங்களை அறிக்கையாக அச்சிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகவல் பலகையில் ஒட்டி விட்டதாக தெரிவித்தார். மற்ற வேட்பாளர்களை போல் என்னையும் மக்கள் நினைக்ககூடாது என தெரிவித்தார்.