தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கேப்டன் விராட் கோலி! – என்ன சாதனை அது?

 

தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கேப்டன் விராட் கோலி! – என்ன சாதனை அது?

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சாதனை ஒன்றை நியூசிலாந்து தொடரில் விராட் கோலி முறியடிக்க உள்ளார்.

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சாதனை ஒன்றை நியூசிலாந்து தொடரில் விராட் கோலி முறியடிக்க உள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நாளை இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி 81 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.

kohli

தோனி கேப்டன் பதவியில் இருந்தபோது 62 இன்னிங்ஸ்களில் 1112 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது கேப்டனாக விராட் கோலி 32 இன்னிங்ஸ்களில் 1032 ரன்கள் எடுத்துள்ளார். எனவே நாளை நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி அல்லது அடுத்த போட்டியில் விராட் கோலி தோனியை விஞ்சி விடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.