தோனியின் சாதனையை காலி செய்து புதிய சரித்திரம் படைத்தார் ரோஹித் சர்மா !!

 

தோனியின் சாதனையை காலி செய்து புதிய சரித்திரம் படைத்தார் ரோஹித் சர்மா !!

சென்னை அணியை அதன் சொந்த மண்ணிலேயே மும்பை அணி வீழ்த்துவதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த ரோஹித் சர்மா நேற்றைய போட்டியின் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 

சென்னை அணியுடனான நேற்றைய போட்டியின் மூலம், மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 

rohit

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா 67 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்த மும்பை அணி சென்னை அணியின் வெற்றிக்கு 156 ரனளை இலக்காக நிர்ணயித்தது. 
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், இலக்கு மிக குறைவாக இருந்தாலும் தோனி இல்லாமல் நாங்கள் ஜெயிக்கவே மாட்டோம் என்பதை போல், அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 109 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. 

sdzg

சென்னை அணியை அதன் சொந்த மண்ணிலேயே மும்பை அணி வீழ்த்துவதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த ரோஹித் சர்மா நேற்றைய போட்டியின் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 

dvzxfb

நேற்றைய போட்டியில் 67 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆட்டநாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா, இதுவரை நடைபெற்றுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் யூசுப் பதான் (16) மற்றும் தோனி (16) ஆகியோரை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா (17) முதலிடம் பிடித்துள்ளார். 
அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் பட்டியல்; 
ரோஹித் சர்மா – 17 முறை
யூசுப் பதான் – 16 முறை
தோனி – 16 முறை
சுரேஷ் ரெய்னா – 14 முறை
கவுதம் கம்பீர் – 13 முறை