‘தோசையில் சாதி அரசியல் பேசிய மதிமாறன் எங்கே?’ சிறுமி ராஜலட்சுமி கொலையில் நெட்டிசன்கள் காட்டம்

 

‘தோசையில் சாதி அரசியல் பேசிய மதிமாறன் எங்கே?’ சிறுமி ராஜலட்சுமி கொலையில் நெட்டிசன்கள் காட்டம்

சிறுமி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சாதி ஒழிப்பாளராக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் மதிமாறன் வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

சென்னை: சிறுமி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சாதி ஒழிப்பாளராக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் மதிமாறன் வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

எழுத்தாளர் மதிமாறன் என்றாலே விவாதங்களில் தடாலடியாக பேசுவாரே அவர் தான? என்று அடையாளப்படுத்துபவர்கள் தான் அதிகம். ஏனெனில், அந்த அளவிற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினரை தொலைக்காட்சி விவாதங்களில் வறுத்தெடுப்பது மதிமாறன் தன் வழக்கமாகவே வைத்திருந்தார்.

தந்தை பெரியாரின் சீடராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் மதிமாறனின் பேச்சை, திமுக உள்ளிட்ட திராவிட இயக்க ஆதரவாளர்கள் பெருமளவில் ரசித்தனர். ஒரு கட்டத்தில், திமுக மேடைகளில் தோன்றி அதன் தற்போதைய தலைவர் ஸ்டாலினை ‘தளபதி’ என்று அடைமொழியிட்டு அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என மறைமுக விஜய்யை விமர்சித்திருந்தார்.

அதேபோல், தோசையில் சாதி இருப்பதாகவும், உணவில் தான் சாதி மையம் கொண்டிருப்பதாகவும் கூறி சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தையே சைலண்ட்டாக பற்ற வைத்தார்.

madhimaran

ஆனால், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்ட 13 வயது தலித் சிறுமி ராஜலட்சுமியின் படுகொலை குறித்து அவர் இன்னும் வாய் திறக்கவே இல்லை. மதிமாறன் மட்டுமல்ல முற்போக்கு பேசும் பல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ராஜலட்சுமி விவகாரத்தில் வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.

இந்த மவுனத்தின் வன்மத்தை புறிந்து கொள்ள முடியவில்லை என தலித்திய அரசியல் பேசுபவர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஏனெனில், தான் ஒரு பெரியாரியவாதி என்பதை கடந்து தன்னை ஓர் அம்பேத்கரியவாதியாகவும் அடையாளப்படுத்திக் கொண்டவர் மதிமாறன்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் இதுவரை வாய் திறக்கவில்லை. ஆதிக்க சாதியினர் நிகழ்த்திய படுகொலை என்பதால் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இதை கையில் எடுக்க தயங்குவதாக விவமறிந்தவர்கள் வருத்தத்துடன் ஆங்காங்கே பதிவிட்டு வருகின்றனர். 

அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என நெட்டிசன்கள் தொடர்ந்து கண்டனப் பதிவுகளை பதிவேற்றி வருகின்றனர். அதில், குறிப்பாக பலரின் ஆதங்கத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார் மதிமாறன். அவரிடம் இருந்து நாங்கள் இதை எதிர் பார்க்கவில்லை என வெளிப்படையாகவே சில பதிவுகளையும் பார்க்க முடிகிறது.

mathimaran

இதுபோன்ற சூழலில் தான், அனைத்தையும் போராடி பெற வேண்டிய நிலை இருப்பதை உணர்ந்த மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் இணைந்து ‘நம் மௌனத்தின் வன்மம்’ என்ற பெயரில் சென்னையில் இன்று போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

இனியாவது, தோசைக்குள் ஒளிந்திருக்கும் சாதி குறித்து பேசியதுபோல், சாதிய ஒடுக்குமுறைக்கு பலியாக்கப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் மரணத்திற்கு நீதி கேட்க வாய் திறப்பாரா மதிமாறன்?