தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணம் வழங்க முடியாவிட்டால் பிஎம் கேர்ஸ்க்கு நிதி உதவி எதற்கு? – சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணம் வழங்க முடியாவிட்டால் பிஎம் கேர்ஸ்க்கு நிதி உதவி எதற்கு? – சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணத்தை ஏற்பாடு செய்ய முடியாவிட்டால் பிஎம் கேர்ஸ்க்கு நிதி உதவி பெறுவது எதற்காக என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணத்தை ஏற்பாடு செய்ய முடியாவிட்டால் பிஎம் கேர்ஸ்க்கு நிதி உதவி பெறுவது எதற்காக என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

corona-in-madhya-pradesh

சுப்பிரமணியன் சுவாமி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறியிருப்பதாவது:
“பசி பட்டினியால் வாடும் இடம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து இவ்வளவு அதிகமான கட்டணத்தை வசூலிக்கும் இந்திய அரசின் செயல் எவ்வளவு மோசமானது… வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இலவசமாக இந்திய அரசு அழைத்துவந்தது. இந்திய ரயில்வே தொழிலாளர்களை இலவசமாக அனுப்ப மறுக்கிறது என்றால் பிஎம் கேர்ஸ்க்கு எதற்காக நிதி உதவி செய்ய வேண்டும்?

இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அலுவலகத்தில் பேசினேன். மத்திய அரசு 85 சதவிகிதமும் மாநில அரசு 15 சதவிகித கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இடம் பெயர் தொழிலாளர்கள் இலவசமாக அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்குப் போய் சேர வேண்டும். அமைச்சரகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் இதை தெளிவுபடுத்த வேண்டும்.

நம்முடைய நிர்வாகம் மற்றும் அமைச்சர் அலுவலகங்களை காங்கிரஸ் முரடர்கள் இன்னும் கட்டுப்படுத்தி வருகிறார்கள் என்று பல முறை எச்சரக்கைவிடுத்துள்ளேன். இல்லாவிட்டால் ப.சி-யை தொடர்ந்து விசாரித்த அதிகாரிக்கு இரண்டு முறை பதவி உயர்வு பெற்ற அதிகாரியிடமிருந்து ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்குமா?” என்று கூறியுள்ளார்.