தொற்றுநோய் கோவிட்-19க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியது…. மகாராஷ்டிரா முதலிடம்

 

தொற்றுநோய் கோவிட்-19க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியது…. மகாராஷ்டிரா முதலிடம்

தொற்று நோய் கோவிட்-19 அல்லது கொரோனா வைரசுக்கு நம் நாட்டில் இதுவரை மொத்தம் 393 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் உயிர் இழந்தவர்களில் அதிகம் பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை  தடுப்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றன கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்புகளை நம்மால் தடுக்க முடியவில்லை. அதேசமயம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் கொரோனா வைரஸ் உயிர் இழப்புகள் குறைவாக உள்ளது. மாநிலங்களின் அறிக்கையின்படி, கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 393ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டி விட்டது. 

கொரோனா வைரஸ்

மாநிலங்கள்      கொரோனாவால் பலியானவர்கள்
மகாராஷ்டிரா               178
மத்திய பிரதேசம்        053
டெல்லி                         030
தமிழ்நாடு                     012
ராஜஸ்தான்                 011
உத்தர பிரதேசம்        010
இதர இந்தியா            099
மொத்தம்                     393

நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர்

மாநிலங்கள்    கொரோனாவிலிருந்து மீண்டவர்கள்
மகாராஷ்டிரா             164
ராஜஸ்தான்                 133
தமிழ்நாடு                    081
உத்தர பிரதேசம்        059
மத்திய பிரதேசம்       038
டெல்லி                       025
இதர இந்தியா           505
மொத்தம்                1,005