தொடர் இருமலால் தொண்டை வலியா? ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்!

தொடர் இருமலால் தொண்டை வலியா? ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்!

மழைக்காலங்கள் ஆரம்பித்து விட்டாலே கூடவே இலவச இணைப்பாகவும், அழையா விருந்தாளியாகவும் காய்ச்சல், ஜலதோஷம்னு வரத் தொடங்கிடும். ஜலதோஷத்துக்கு எல்லாம் மருந்தே கிடையாதுன்னு நிறைய பேர் இலவச ஆலோசனைகளை அள்ளித் தெளிப்பாங்க. அதுவும், இந்த இருமல் படுத்துகிற பாடு எல்லாம் அவஸ்தை தான். அவ்வளவு நேரம் உட்கார்ந்துக்கிட்டு இருப்போம். அப்போது தான் வேலையெல்லாம் முடிச்சிட்டு படுக்கலாம்னு நினைச்சா தூங்க விடாம தொடர் இருமலா வந்து தொண்டைக்குழியை எல்லாம் புண்ணாக்கி ரணப்படுத்தும்.

நுரையீரலில் கிருமிகளின் தொற்று ஏற்படுறதுனால தான் இருமல் வர ஆரம்பிக்குது. ஆனா அந்த கிருமிகளை அத்தனை சீக்கிரமா நம்மளால விரட்டியடிக்க முடியாது. இது சாப்பாடும் காரணமா இருக்கு. நமது சுவாசமும் இதுக்கு ஒரு காரணம். ஏன்னா, மூக்கின் வழியாக கிருமிகளின் தாக்கம் உருவாகும் போது தான் அந்த கிருமிகள் நமது தொண்டைக்கும் பரவி செல்கிறது. அப்படி பரவுகிற கிருமிகள் அங்கே மூச்சுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு இருமலை உண்டாக்குகிறது. இது தவிர அலர்ஜியினாலும் இருமல் வருவது உண்டு. தூசு, ரசாயனம் மற்றும் பல வித காரணங்களால் அலர்ஜி ஓயாத வறட்டு இருமலை வரும்.

throat pain

இப்படி வருகிற இருமலுக்கு அவஸ்த்தைப்பட்டுகிட்டு இருக்காம ஒரே நாளில் சரி பண்ணிடலாம்.  முதலில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிச்சு, அந்த கிருமிகளை அழிக்க வேண்டும். அதெல்லாம் ஒரே நாளில் நடப்பதில்லை என்பதால் தான், அலறியடிச்சு மருத்துவர்கிட்டே போய் ஆன்டிபயாடிக் சிரப்களை அள்ளி அள்ளி குடிக்கிறோம். அதனால என்ன பக்கவிளைவுகள்னு எல்லாம் யாருக்குமே தெரியாது. சாதாரணமா நம்ம வீட்டில் இருக்கும் பாலைக் குடிச்சாலே இந்த இருமலை ஒரே நாளில் விரட்டிவிடலாம். ஆனா பால் குடிக்கும் போது, இப்படி செய்து குடிச்சு பாருங்க!

milk and egg

ஒரு டம்ளர் பாலை எடுத்துக் கொண்டு நன்றாக பொங்கி வரும் வரையில் சூடு பண்ணுங்க. அப்படி பால் பொங்கும் போது அந்த டம்ளர் பாலில் அப்படியே ஒரு முட்டையோட மஞ்சள் கருவை மட்டும் எடுத்து போட்டு கலக்கி விடுங்க. இப்போ அந்த கலவை நல்லா கலந்தவுடன் அடுப்பை அணைச்சுடுங்க.. குடிக்கிற அளவுக்கு வெதுவெதுப்பான சூட்டிற்கு வரும் வரையில் பொறுமையா காத்திருங்க.. வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அந்த கலவையோட ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகுங்கள். இப்படி குடிச்சா ஒரே நாள்ல இருமல் இருந்த இடம் தெரியாம போயிடும்!