தொடர்ந்து 8 மாதங்களாக ரத்த கண்ணீர் வடிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்! வரியை குறைங்க பாஸ்…. சவுண்ட் விடும் சங்கம்!

 

தொடர்ந்து 8 மாதங்களாக ரத்த கண்ணீர் வடிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்! வரியை குறைங்க பாஸ்…. சவுண்ட் விடும் சங்கம்!

தொடர்ந்து 8 மாதமாக கடந்த ஜூன் மாதத்திலும் வாகன விற்பனை படுத்து விட்டது இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. வாகன துறையில் மீண்டும் வளர்ச்சி ஏற்பட ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் தினந்தோறும் சாலைகளில் செல்லும் வாகனம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இதனால்தான் வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது கடையை இங்கே போடுகின்றன. நல்ல வளர்ச்சி கண்டு வந்த இந்திய வாகன துறை 2018 நவம்பர் முதல் வளர்ச்சியா அப்படின்னா என்னவென்று கேட்கும் நிலையில் இருந்து வருகிறது.

கார்கள்

மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தால் வாகன துறை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என இத்துறையை நம்பியது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்பது போல் மத்தியில் பா.ஜ. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தபிறகும் வாகன துறையை விட்டு துரதிஷ்டம் போவேன்னா என்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் வாகன விற்பனை முந்தைய மாதங்களே போலவே எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது.

கடந்த மாதத்தில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான  மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை குறைந்துள்ளது. இதனையடுத்து வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும்  என வாகன நிறுவனங்கள் மற்றும் இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கமும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது வாகனங்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

வேகன் ஆர்

வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவு செய்யும். அதனால் வாகன துறை வளர்ச்சிக்காக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேறு சில சலுகைகள் மற்றும் கொள்கை முடிவுகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.