தொடர்ந்து புதிய படங்களில் கமிட் ஆகும் ரஜினி – அப்போ கட்சி ?

 

தொடர்ந்து புதிய படங்களில் கமிட் ஆகும் ரஜினி  – அப்போ கட்சி ?

பேட்ட படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று தெரிகிறது.

பேட்ட படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று தெரிகிறது. இந்த படத்தை அடுத்து அவர் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

வினோத் இயக்கத்தில் ரஜினி 

கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியுடன் அடுத்த படத்தில் இணைய  காத்திருக்க தற்போது தீரன் திரைப்பட இயக்குனர் வினோத்தும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். வினோத் தற்போது அஜித் நடிப்பில் ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது இல்லாமல் ரஜினிகாந்த் அடுத்ததாக  எஸ்.எஸ். ராஜமவுலியின் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன. 

rajini

ரஜினி மக்கள் மன்றம் 
 

இந்நிலையில் கட்சி தொடங்க ஆயத்தப் பணிகளில் இறங்கிய ரஜினி அதை அப்படியே நிலுவையில் விட்டு விட்டார்.நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை நேராக தமிழக சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்று ஒரு முடிவோடு உள்ளார் ரஜினிகாந்த். அவர் எப்பொழுது கட்சி துவங்குவார் என்ற எதிர்பார்ப்பில் அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தொடர்ந்து புதுப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.

rajini

இதனால் ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார். அவர் வராமல் இருப்பது தான் அவருக்கு நல்லது என்று விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். ஆனால் அனைத்தையும் கேட்டுக் கொண்டு ரஜினி வழக்கம் போன்று அமைதியாக உள்ளார். எங்கள் தலைவர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவார் என்று அவரின் ரசிகர்கள் நம்புகிறார்கள்.