தொடரும் விபத்துகள்! ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! போராடி மீட்பு!

 

தொடரும் விபத்துகள்! ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! போராடி மீட்பு!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது கல்வான் எனும் சிறிய கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து விட்டான். 300 அடி ஆழமுள்ள இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவனை மீட்பது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது கல்வான் எனும் சிறிய கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து விட்டான். 300 அடி ஆழமுள்ள இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவனை மீட்பது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தியறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும் உடனடியாக சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

boy

கடும் முயற்சிக்குப் பிறகு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து 6 வயது சிறுவனை பத்திரமாக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டனர். ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின்  உடல் நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்தனர். தற்போது சிறுவன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.