தொடரும் இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம்…. பலருக்கு உடல்நல பாதிப்பு

 

தொடரும் இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம்…. பலருக்கு உடல்நல பாதிப்பு

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 6-வது நாளாக தொடர்ந்து வருவதால் பலருக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 6-வது நாளாக தொடர்ந்து வருவதால் பலருக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ம் தேதி முதல் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் 2000-க்கும் அதிகமானோர் நடத்தி வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இடை நிலை ஆசிரியர்களின் போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் வராததால் சாகும் வரை தங்களின் உண்ணாவிரத போராட்டத்தை தொடரப்போவதாக அவர்கள் உறுதிபட கூறியுள்ளனர்.