தொடங்கியது சர்ச்சை: ‘2.0’ படத்தை மறு தணிக்கை செய்யக் கோரி மனு

 

தொடங்கியது சர்ச்சை: ‘2.0’ படத்தை மறு தணிக்கை செய்யக் கோரி மனு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம் வரும் நவ.29ம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இந்திய அளவிலான பெரிய பட்ஜெட் படம் என்பதால், இதன் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் முதன்முறையாக 3டி கேமராவில் படமாக்கப்பட்ட ‘2.0’ திரைப்படத்தை ஹாலிவுட் படங்களை போல் ஐமெக்ஸ் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2point0

இந்நிலையில், இப்படத்தில் செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இந்திய செல்போன் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினர் மத்திய தணிக்கத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்துள்ளனர்.

அவர்களது மனுவில், ’2.0’ படத்தின் டீசரில் செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், படத்தின் தணிக்கை சான்றிதழை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். எவ்வித ஆதாரமுமின்றி செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.