தேவர் சிலைக்கு மாலை – மதுரைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு

 

தேவர் சிலைக்கு மாலை – மதுரைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு

மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எழுத்தாளார் சு.வெங்கடேசன் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 17 -ஆவது பாராளுமன்றத்தைத்  தேர்ந்தெடுக்கும் மக்களவைத் தேர்தல் நாடு முழுவது ஏப்ரல் 11 -ஆம் தேதி பல கட்டங்களாக நடக்க இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கும் 18 – ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

su.venkatesan

இந்த முறை தமிழகத்தில் பலம் வாய்ந்த கூட்டணியாக கருத்ப்படுவது  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆகும். இந்த கூட்டணியின் சார்பாக மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எழுத்தாளார் சு.வெங்கடேசன். இதற்காக அவர் தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலகத்தில் நேற்று தாக்கல் செய்தார். 

dhevar statue

எழுத்தாளர் சு. வெங்கடேசன் காவல் கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், சமீபமாக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் வேள்பாரி நாவலின் ஆசிரியரும் ஆவார். இது மட்டுமின்றி மதுரை மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயம் பெற்றவராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில், காவல்துறையிடம் முன் அனுமதி பெறாமல் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.