தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு குற்றம் சொல்வது நேர்மையற்றதை காட்டிலும் மோசமானது- தேர்தல் ஆணையர் ஆக்ரோஷம்….

 

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு குற்றம் சொல்வது நேர்மையற்றதை காட்டிலும் மோசமானது- தேர்தல் ஆணையர் ஆக்ரோஷம்….

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது குற்றஞ்சொல்வது நேர்மையற்றதை காட்டிலும் மோசமானது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று கொல்கத்தா ஐ.ஐ.எம்.ல் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து  கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த பிறகு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ்சொல்வது நேர்மையற்றதை காட்டிலும் மோசமானது. மேலும் குற்ற நோக்கத்துடன் இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம்

நீங்கள் தோற்கும்போது இயந்திரத்தை அடித்து நொறுக்கும் பொருளாக மாற்றுவது ஏன்? இந்த குற்றஞ்சாட்டுகள் தேர்தல் ஆணையத்தின் நேர்மையை புண்படுத்துகின்றன.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது. ஆனால் அதேசமயம் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகள் ரிப்பேர் ஆவது போல் அதனை ரிப்பேர் ஆக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை குறை சொல்வதை குறிப்பிட்டுதான் சுனில் அரோரா அந்த விழாவில் பேசினார்.