தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதி…விஷால் அணியின் தில்லாலங்கடி வேலைகள்…

 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதி…விஷால் அணியின் தில்லாலங்கடி வேலைகள்…

தமிழக அரசியல்வாதிகளை விட தாங்கள் ஸ்டண்ட் அடிப்பதில் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விஷால் அணியினர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசியல்வாதிகளை விட தாங்கள் ஸ்டண்ட் அடிப்பதில் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விஷால் அணியினர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

nadigar sangam

நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் சங்க கட்டிட நிதிக்காக பொருளாளர் கார்த்தி ரூ. 1 கோடியும், பொதுச் செயலாளர் விஷால் ரூ. 25 லட்சமும் அளித்துள்ளனர். நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வசதியாக படப்பிடிப்புகளை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

natchitra cricket

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுகிறோம் என்று கூறித் தான் பதவிக்காலம் முடிந்தும் தேர்தலை நடத்தாமல் இருந்தது விஷால் அடங்கிய பாண்டவர் அணி.   நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட நிதி திரட்ட சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, மலேசியாவில் கலை நிகழ்ச்சி எல்லாம் நடத்தினார்கள். அப்படியும் போதிய பணம் கிடைக்கவில்லை என்று கூறி மேலும் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர். ஆனால் அது முடியாமல் போனது.

vishal and karthi

 இந்நிலையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்டிட பணிக்காக நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ரூ. 1 கோடியும், பொதுச் செயலாளர் விஷால் ரூ. 25 லட்சமும் அளித்துள்ளனர். கட்டிட நிதிக்காக பணம் கொடுக்க வேண்டும் என்கிற ஞானோதயம் விஷாலுக்கும், கார்த்திக்கும் தேர்தல் நேரத்தில் தான் வருமோ என்று நடிகர் சங்கத்தில் உள்ளவர்களே முணுமுணுக்கிறார்கள்.

nadigar sangam

 தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி நிதி அளிப்பது தமிழக அரசியல்வாதிகளின் செயலுக்கு இணையாக உள்ளது என்றும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அவர்களுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அவரது அணியினரே முனுமுன்க்கிறார்கள். விஷால் வரும் 23ம் தேதி நடக்கும் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட பணம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.