தேர்தல் நாடகம் 2.0: துப்புரவு தொழிலாளர்கள் பாதத்தை கழுவிய பிரதமர் மோடி

 

தேர்தல் நாடகம் 2.0: துப்புரவு தொழிலாளர்கள் பாதத்தை கழுவிய பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசம் மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, துப்புரவு பணியாளர்களின் கால்களைக் கழுவி தேர்தல் பணியினை தீவிரப்படுத்தியுள்ளார்.

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசம் மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, துப்புரவு பணியாளர்களின் கால்களைக் கழுவி தேர்தல் பணியினை தீவிரப்படுத்தியுள்ளார்.

கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடி வழிபடுவதற்காக மோடி இன்று பிரயாக்ராஜ் சென்றார். அவரை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் கங்கை நதிக்கரையில் நடைபெற்ற வழிபாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்பிறகு துப்புரவு பணியாளர்களின் கால்களை தண்ணீரில் கழுவினார். அவர்கள் காலில் ஈரம் இல்லாதபடி துடைத்தும் விட்டார்.

இந்தியாவில் 5 நாட்களுக்கு ஒரு துப்புரவு பணியாளர்கள் பணி செய்யும்போது உயிரை இழக்கின்றனர் என 2017-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸின் அறிக்கை தெரிவிக்கிறது. வட மாநிலங்களில் மலம் அள்ளும் வால்மீகி சமுதாய மக்கள், அந்தப் பணியை செய்வது ஆன்மீக அனுபவத்தை அளிக்கும் என துப்புரவு பணியாளர்கள் கால்களை கழுவிய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். துப்புரவு பணியாளர்களின் துயரத்தை துடைக்காமல், அவர்கள் பாதத்தை துடைப்பது என்பது மக்களவை தேர்தலை மனதில் கொண்டுதான் என அப்பட்டமாக தெரிகிறது.

புல்வாமா தாக்குதலில் பாஜக அரசாங்கத்துக்கு சம்பந்தம் இருக்கலாம் என மேற்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், மக்களை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வைத்திருந்து ஓட்டை பெறுவதுதான் மோடி அரசாங்கத்தின் திட்டம் என சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பசுக் காவலர்களால் தலித் மக்களும், இஸ்லாமியர்களும் கொலை செய்யப்படுவதை பெரிதாக கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் நெருங்கவும் துப்புரவு தொழிலாளர்கள் (தலித் மக்கள்) கால்களை கழுவுகிறார். கையால் மலம் அள்ளும் இழி நிலைக்கு தள்ளப்பட்ட துப்புரவு தொழிலாளர்களின் துயர் துடைக்க இந்த பாஜக அரசாங்கம், இதுவரையிலும் உருப்படியாக எதுவும் செய்யவில்லை.