தேர்தல் உறுதியாய் நடக்கும் | ஆளுனரை சந்தித்த பின் விஷால் பேட்டி

 

தேர்தல் உறுதியாய் நடக்கும் | ஆளுனரை சந்தித்த பின் விஷால் பேட்டி

விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ இந்த முறையும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என இருமுனை போட்டியாக இந்த நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.

விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ இந்த முறையும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என இருமுனை போட்டியாக இந்த நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியை எதிர்த்து பிரசாந்த்தும் போட்டியிடுகின்றனர். இதுமட்டும் இல்லாமல் மொத்தம் 24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, 58 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

nadigar sangam

இம்மாதம் 23ம் தேதி தேர்தல் நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், அறிவிக்கப்பட்ட எம்ஜிஆர். ஜானகி கல்லூரியில் நடத்தாமல், வேறு இடத்திற்கு தேர்தலை மாற்றிவைக்கும்படி நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. இதற்கான மாற்று இடங்களாக மூன்று இடங்களை விஷால் அணியினர் முடிவு செய்து வைத்திருந்தனர். நடிகர் சங்க தேர்தல் பிரசாரம் சூடு பிடித்த நிலையில், உறுப்பினர்களின் எண்ணிக்கை இறுதி செய்யவில்லை’ என்று காரணம் காட்டி, தேர்தல் தேதியை ஒத்தி வைக்க ஆணையிட்டிருக்கிறார் மாவட்ட பதிவாளர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் விஷால் அணியினர் இன்று கவர்னரை சந்தித்தனர். 

vishal

ஆளுனரை சந்தித்த பின்னர் விஷால் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
நடிகர் சங்க தேர்தல் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு ஆவண செய்யுமாறு மனு அளித்தோம்.  ஆளுநர் தான் இந்த மாநிலத்தின் தலைவர். எனவே அவர், போலீசுக்கு உத்தரவிடுவார் என்கிற நம்பிக்கையில் அவரை சந்தித்திருக்கிறோம். நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டப்படியே நடைபெறும். நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் திட்டமிட்டபடி நடக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.