தேர்தலுக்குத் தயாராகும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!

 

தேர்தலுக்குத் தயாராகும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!

அதனையடுத்து விஷால் தரப்பில் நடிகர் சங்க தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கிக் கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரைச்  சங்கத்தின் தனி அதிகாரியாகத் தமிழக அரசு நியமித்தது.  ஆனால்  தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனி அதிகாரி நியமனத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது. அதனையடுத்து விஷால் தரப்பில் நடிகர் சங்க தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 

 

ttbn

 

அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க  தேர்தலை ஜூன் 30-க்குள் நடத்தி  முடிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்ட நிலையில் ஓய்வுபெற்ற  உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனை   சிறப்பு அதிகாரியாக நியமித்தனர். 

 

அந்த வகையில்  தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் திரு. முரளி அவர்கள் தலைமையிலான ஒரு அணியும் தயாரிப்பாளர் சத்யஜோதி திரு. தியாகராஜன் அவர்களின் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட உள்ளன. 

இந்நிலையில் மூன்றாவது அணியாகத் தயாரிப்பாளர் திரு.JSKசதிஷ்குமார் அவர்களின் தலைமையில் ஓரு அணியும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. சிறு மற்றும் குறைந்த முதலீட்டு படத்தயாரிப்பாளர் இந்த அணியில் இனைவார்கள் என்றும் அவர்களை நம்பி இந்த மூன்றாவது அணி தேர்தலை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  இதனால் மற்ற இரு அணிகளில் உள்ளவர்கள் இதில் வந்து இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும்  ஒரு சில அணிகள் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இன்று   தயாரிப்பாளர்களை அழைத்து கூட்டம் போடவுள்ளதாகவும் தெரிகிறது.