தேமுதிக-வுடன் கூட்டணி கிடையாது…38 தொகுதிகளில் அமமுக போட்டி-டிடிவி தினகரன் அறிவிப்பு!!

 

தேமுதிக-வுடன் கூட்டணி கிடையாது…38 தொகுதிகளில் அமமுக போட்டி-டிடிவி தினகரன் அறிவிப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைகிறது. அதிமுக-பாமக-பாஜக கட்சிகளும், திமுக-காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் உச்சத்தை எட்டியுள்ளன.

ஆனால், தேமுதிக, தமாக, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமானவராக பார்க்கப்படும் தினகரன், அரசியல் களத்தில் தற்போது தனித்து விடப்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும், கூட்டணி அமைப்பது தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறி வரும் தினகரன், 40 தொகுதிகளில் தனித்து போட்டி என்றும் கூறிவருகிறார். அதேசமயம் அவர் தேமுதிக-வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தேமுதிக-வுடன் கூட்டணி கிடையாது என தெரிவித்துள்ள தினகரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.