தேமுதிகவின் ஆசையில் மண்ணை போட்ட ஸ்டாலின்! எப்படியும் வந்துதானே ஆகணும் எடப்பாடி உற்சாகம்!?

 

தேமுதிகவின் ஆசையில் மண்ணை போட்ட ஸ்டாலின்! எப்படியும் வந்துதானே ஆகணும் எடப்பாடி உற்சாகம்!?

அ.தி.மு.கவிடம் 9 சீட் கேட்டு பிகு காட்டிக்கொண்டு இருந்த தேமுதிகவுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது.

சென்னை: அ.தி.மு.கவிடம் 9 சீட் கேட்டு பிகு காட்டிக்கொண்டு இருந்த தேமுதிகவுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது.

விஜயகாந்த் அமெரிகாவிலிருந்து திரும்பி இருந்தாலும் அவரால் மேடை ஏறி பிரச்சாரம் செய்ய முடியாது என்ற செய்தி அதிமுகவுக்கு எட்டியபோதே அவர்கள் உஷாராகிவிட்டார்கள்.

 2011 ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது செங்கோட்டையனையும் ஓ.பி.எஸ்ஸையும் பலமுறை நடக்கவிட்டது, திருமதி விஜயகாந்தின் போக்கு என்று பலகாரணங்களால் ஏற்கனவே எரிச்சலில் இருந்தது அ.தி.மு.க தலைமை.
 ஆனால்,பி.ஜே.பிகாரர்கள் தே.மு.தி.கவும் இருந்தால் இன்னும் வாக்கு சதவீதம் கூடும் என்கிற ஆசையில் கணக்குப்போட்டார்கள்!

 இந்த கள நிலவரம் புரியாத சுதீஷும் பிரேமலதாவும் ஒன்பது தொகுதிகள் கேட்டு அடாவடியாக பேசிக்கொண்டு இருந்தார்கள். நீங்கள் தராவிட்டால் எங்களுக்கு தி.மு.க தரும் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்தார்கள். இந் நிலையில் தே.மு.தி.கவுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி பிரேமலதாவின் கனவில் மண்ணள்ளி போட்டுவிட்டார் ஸ்டாலின்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.கவை பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் தாழ்த்தியதையும், கடைசி நேரத்தில் மக்கள் நலகூட்டணி அமைத்து விஜயகாந்த் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்திக்கொண்டதை ஸ்டாலின் எப்படி மறப்பார்!?

இப்போது,தே.மு.தி.கவிற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்வதே.விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வரமுடியாத நிலையில் அவர்களுக்கு இரண்டு சீட்டுகள் கொடுத்தாலே அதிகம் என்று பியூஷ் கோயலிடம் சொல்லிவிட்டார ஐவர் குழுவில் ஒருவரான அமைச்சர் தங்கமணி.

 பா.ம.கவுக்கு வட தமிழகத்தில் மட்டும்தான் செல்வாக்கு, எங்களுக்கு தமிழகம் முழுவதும் ஓட்டு வங்கி இருக்கிறது என்று பிரேமலதா சொன்னாலும், அ.தி.மு.க அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை! இந்த தேர்தலிலையும் விட்டுவிட்டால் தே.மு.தி.கவின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதால் அ.தி.மு.கவிடம் சரணடைந்தே தீருவார்கள் என்று உற்சாகத்தில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.

என்ன செய்யப்போகிறார் பிரேமலதா!?