தேனி இரட்டை கொலை வழக்கு; குற்றவாளியின் தூக்குத் தண்டனை ரத்து!

 

தேனி இரட்டை கொலை வழக்கு; குற்றவாளியின் தூக்குத் தண்டனை ரத்து!

தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் எழில் முதல்வன் மற்றும் முத்துதேவன் பட்டியை கஸ்தூரி ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2011-ஆம் ஆண்டு காணாமல் போயினர்

புதுதில்லி: தேனி இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் எழில் முதல்வன் மற்றும் முத்துதேவன் பட்டியை கஸ்தூரி ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2011-ஆம் ஆண்டு காணாமல் போயினர். இதுகுறித்து கஸ்தூரியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

rape

இதையடுத்து, சுருளிமலை பகுதியில் எழில்முதல்வன் மற்றும் கஸ்தூரி ஆகியோரை சடலமாக போலீசார் மீட்டனர். பிரேதப்பரிசோதனை அறிக்கை மற்றும் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், கஸ்தூரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் எழில்முதல்வன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், திவாகரன் (எ) கட்டவெள்ளை-யை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், குற்றவாளி திவாகரனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

theni murder

இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் தேனி முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை. இதையடுத்து, தனது தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் திவாகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், திவாகரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ததுடன், அவரது மனுவை தொடர்ந்து விசாரிக்க உள்ளது. வருகிற திங்கள் கிழமையன்று திவாகருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

சுட்டுக் கொல்லப்படும் இளைஞர்கள்; டெல்லியில் சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?!..