தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

 

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படுவதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது

சென்னை: தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படுவதற்கு எதிரான வழக்கில்  தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ளே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது.

ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என பொதுமக்கள் அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, உத்தரவை மறு தேதி குறிப்பிடாமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்தி வைத்தது. இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.