தேநீர் பைகள் (Tea Bags) கொடுக்கும் ஆச்சரியமான அழகு நன்மைகள்!

 

தேநீர் பைகள் (Tea Bags) கொடுக்கும் ஆச்சரியமான அழகு நன்மைகள்!

டீ பேக்குகள் மூலமாக வீட்டிலேயே முயற்சி செய்யக் கூடிய சில எளிதான அழகு சிகிச்சைகளை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்!

பிளாக் டீ அல்லது க்ரீன் டீ என கிட்டத்தட்ட அனைவரது வீட்டிலும் ஒரு டீ பாக்ஸ் உள்ளது. நீங்கள் ஒரு டீ பிரியர் என்றால் இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். டீ பேக்குகள் மூலம் நமது அழகை மெருகூட்ட முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். டீ பேக்குகள் மூலமாக வீட்டிலேயே முயற்சி செய்யக் கூடிய சில எளிதான அழகு சிகிச்சைகளை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்!

ttn

டீ பேக்குகளின் மிகவும் பொதுவான அழகு பயன்பாடுகளில் ஒன்று, கண்களின் வீக்கத்தை குறைப்பதாகும். டீயில் உள்ள காஃபின் இரத்த நாளங்களை சுருக்க உதவுகிறது. அதனால் இது வீக்கத்தைக் குறைக்கிறது. இதற்கு பிளாக் டீ அல்லது க்ரீன் டீ என எந்த டீ பேக்கை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ttn

பிளாக் சர்கிள்ஸ் எனப்படும் கருமை நிற புள்ளிகளை அகற்றவும் பிளாக் டீ அல்லது க்ரீன் டீ பேக்கை பயன்படுத்தலாம். இதனால் கண் பகுதியைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களை சுருங்க உதவுகிறது.

ttn

க்ரீன் டீ ரெடி செய்த பிறகு அந்த டீ பேக்கை குப்பைத் தொட்டியில் வீசாமல் அந்த டீ பையைத் திறந்து உங்கள் ஃபேஸ் பேக்கில் அதன் டீ இலைகளைப் பயன்படுத்தலாம். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது. இது இறந்த தோல் செல்களை புதுப்பிக்க உதவுகிறது.

ttn

கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு இவற்றை பயன்படுத்தலாம். கொதிக்கும் நீரில் ஒரு சில கிரீன் டீ பைகளைச் போட வேண்டும். பின்னர் அந்த டீயை ஆற வைத்து குளிர்ந்தவுடன், ஈரமான கூந்தலில் தடவ வேண்டும். பின்னர் 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு நீரில் கூந்தலை அலச வேண்டும்.

ttn

வெண்படல அல்லது கண் தொற்று இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட அந்த பகுதியில் குளிர்ந்த தேநீர் பைகளை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். இது வீக்கத்தையும், பாதிப்பையும் குறைக்கவும் உதவும்.