தேசபக்திக்கு மரியாதை : தேர்தல் பிரச்சாரத்துக்கு ராணுவ உடை அணிந்த பாஜக எம்பி விளக்கம்

தேசபக்திக்கு மரியாதை : தேர்தல் பிரச்சாரத்துக்கு ராணுவ உடை அணிந்த பாஜக எம்பி விளக்கம்

ராணுவ உடை அணிந்து பிரச்சாரம் செய்த பாஜக எம்பி மனோஜ் திவாரியை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் வேளையில், அவர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

ராணுவ உடை அணிந்து பிரச்சாரம் செய்த பாஜக எம்பி மனோஜ் திவாரியை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் வேளையில், அவர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கள் பிரச்சார வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பாஜக சார்பில் நேற்று நாடு முழுவதும் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியை பாஜக எம்பி மனோஜ் திவாரி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் அபிநந்தன் குறித்த பாடலைப் பாடியதோடு இல்லாமல் ராணுவ வீரரின் சீருடை போன்ற உடையணிந்து பேரணியில் கலந்துகொண்டார். அவரது செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் அவர் ராணுவ உடை அணிந்து பிரச்சாரம் செய்தது பற்றி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், நான் வெவ்வேறு நேரங்களில் மிலிட்டரி சட்டை, மிலிட்டரி தொப்பி அணிவேன். அதை அணிவது எனக்கு பெருமையாக உள்ளது. அதை அணிவதன் மூலம் நம் ராணுவ வீரர்களின் தேசபக்திக்கு மரியாதை செய்வதாக உணர்கிறேன். இந்தியர்கள் ராணுவ உடை அணிய பெருமைப்பட வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.

manoj

இதே மனோஜ் திவாரியை தேர்தலுக்கு முன்பு எத்தனை பேர் ராணுவ உடையில் பார்த்திருக்கிறார்கள் என்றால் பதில் இல்லை. புல்வாமா தாக்குதலை பாஜக முழுக்க முழுக்க தேர்தலில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது என பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.