தெலுங்கு நடிகர் மீது தாக்குதல்: நடந்ததை விவரிக்கும் விமல்

 

தெலுங்கு நடிகர் மீது தாக்குதல்: நடந்ததை விவரிக்கும் விமல்

நடிகர் விமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து தற்போது போலீசுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: நடிகர் விமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து தற்போது போலீசுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மது போதையில் தன்னை தாக்கியதாக  நடிகர் அபிஷேக் சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள காவல் நிலயத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் அன்று நடந்தது பற்றி நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார். 

abishek

அவர் கூறியிருப்பதாவது, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு எனக்கு நன்கு தெரிந்த ஒன்றே. என்னை தேடி வரும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்தால் அங்குதான் தங்க வைப்பேன். மதுரையில் இருந்து அன்று என் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அன்று எனது சொந்த ஊரில் சித்தப்பா இறந்து விட்ட தகவல் கிடைத்தது. அதனால் நண்பரை தங்க வைப்பதற்காக அந்த அப்பார்ட்மெண்டுக்கு அழைத்துச் சென்றேன். வழக்கமாக அங்கு இருக்கும் மானேஜர் இல்லாததால்,வரவேற்பு அறை அருகில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரை அப்பார்ட் மெண்டின் பணியாளர் என்று நினைத்து, அறை இருக்கிறதா என்று விசாரித்தேன்.

அதற்கு அவர் நான் பணியாளர் இல்லை. நானும் கெஸ்ட்தான் என்று சொல்லியிருந்தால் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் நான் யார் தெரியுமா? என்னை எப்படி நீங்கள் கேட்கலாம் என்று தகாக வார்த்தைகளால் சத்தமாக பேசி ஆர்ப்பாட்டம் செய்தார். 

vimal

நான் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தேன். அதற்குள் அவர் என்னை ஒருமையில் கடுமையாகத் திட்டியதால் நண்பர்கள் அவரை தாக்க ஓடி வந்தனர். அதற்குள் அவர், என்னை தாக்க ஆரம்பித்து விட்டார். இதனால் இருதரப்புக்கும் கைகலப்பாகி விட்டது. அதன் பிறகு மானேஜர் வந்தார். அவரிடம் விபரம் சொல்லி நண்பரை தங்கவைத்து விட்டு நான் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று விட்டேன்.

vimal

அதேபோல் நான் போலீஸுக்குப் பயந்து தலைமறைவாக ஆனதாக வந்த செய்திகளிலும் உண்மை இல்லை. நான் சித்தப்பாவின் இறுதி சடங்கில் இருந்ததால் போனை ஆஃப் செய்து வைத்திருந்தேன். இப்போது இரு தரப்புக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அப்படி அவர்கள் ஒத்துவராவிட்டால் பிரச்சினையை சட்டப்படி எதிர்கொள்ளவும் தயார்’ என்றார் விமல்.