தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் பார்த்தசாரதி கோவிலில் தரிசனம் !

 

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் பார்த்தசாரதி கோவிலில் தரிசனம் !

பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனை கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது.

தமிழக பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனை கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. அதன் பின், தெலுங்கானா மாநிலத்தின்  வளர்ச்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த தமிழிசை, தெலுங்கானாவில் ஆளுநர் ஆன பிறகு, முதல் முறையாகக் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தமிழகத்துக்கு வந்து திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்தார். 

ttn

இன்று வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவில். அங்குப் பார்த்தசாரதி பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

tth

இதனைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர். அதே போல, இன்று தமிழிசை  சௌந்தர ராஜனும் பார்த்தசாரதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பொதுமக்களைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.