தெலங்கானாவை பார்த்து கற்றக்கொள்ளுங்கள்! – டெல்லி, உ.பி போலீசுக்கு மாயாவதி அட்வைஸ்

தெலங்கானாவை பார்த்து கற்றக்கொள்ளுங்கள்! – டெல்லி, உ.பி போலீசுக்கு மாயாவதி அட்வைஸ்

கால்நடை மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் சிக்கிய நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தெலங்கானாவைப் பார்த்து உ.பி போலீஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாயாவதி கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கால்நடை மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் சிக்கிய நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தெலங்கானாவைப் பார்த்து உ.பி போலீஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாயாவதி கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

encourter

ஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. நாளுக்கு நாள் இந்த கோரிக்கை அதிகரித்து வந்தது. இந்த சூழ்நிலையில் இன்று காலை நான்கு பேரும் தப்பி ஓட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து உ.பி முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தெலங்கானா போலீசார் மிகச்சிறந்த செயலை செய்துள்ளனர். உ.பி போலீசார் தெலங்கானாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல, டெல்லி போலீசாரும் மாற வேண்டும். உ.பி-யில் பலாத்கார சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன.

mayavathi

ஒரு மாவட்டத்தில் மட்டுமல்ல, உ.பி-யில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இதுதான் நிலைமை. இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை எந்த பெண்ணுக்குமே பாதுகாப்பு இல்லை. அந்த அளவுக்கு உத்தரப் பிரதேசத்தில் காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது. நான் முதல்வராக பணியாற்றிய போது தவறு செய்தது என்னுடைய கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்தேன். அதைப் போல தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெலங்கானாவைப் பார்த்து உ.பி மற்றும் டெல்லி போலீசார் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.