தெற்காசிய நாடுகளில் செல்லாத மாலத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம்

 

தெற்காசிய நாடுகளில் செல்லாத மாலத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம்

தெற்காசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்கு மட்டும் பிரதமர் மோடி செல்லாமல் இருந்த நிலையில், தற்போது அந்நாட்டு அவர் செல்லவுள்ளார்

டெல்லி: தெற்காசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்கு மட்டும் பிரதமர் மோடி செல்லாமல் இருந்த நிலையில், தற்போது அந்நாட்டு அவர் செல்லவுள்ளார்.

தெற்காசியா நாடான மாலத்தீவுகளில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இப்ராஹிம் சோலிஹ் வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த போது, தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு  வருமாறு பிரதமரை இப்ராஹிம் சோலிஹ் அழைத்துள்ளார். அவற்றின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மாலத்தீவு செல்லவுள்ளார்.

தெற்காசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்கு மட்டும் பிரதமர் மோடி இதுவரை சென்றதில்லை என்பது கவனிக்கத்தக்கது. தற்போது அந்நாட்டுக்கு செல்லவுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மீண்டும் புதுப்பிக்க திட்டமிட்டு உள்ளார்.

மாலத்தீவின் முந்தைய ஆட்சியின்போது, சீனாவின் ஆதிக்கம் காரணமாக இந்தியாவுடனான நட்புறவை அந்நாடு விலக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.