தெறி படத்தில் வந்த குழந்தையா இது? வைரல் போட்டோ 

 

தெறி படத்தில் வந்த குழந்தையா இது? வைரல் போட்டோ 

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான படம்  ’தெறி’. சமந்தா, எமி என்று இரு கதாநாயகிகள் நடித்துள்ள இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், எமிஜாக்சன், சுனேனா, ராதிகா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் வில்லனாக மறைந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் நடித்திருந்தார். 

இந்த படத்தில் பிரபல நடிகை மீனாவின் மகள், நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதில் நைனிகாவின் குழந்தை பருவ கதாபாத்திரத்தில், சிறப்புத் தோற்றத்தில்  ஒரு பெண் குழந்தை நடித்திருப்பார். 

வெள்ளை நிறத்தில், குறு குறு பார்வை, அழகான சிறப்பு என ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் தற்போது எப்படி உள்ளார் என்கிற புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.