தென் கொரியாவில் குணமடைந்த 116பேருக்கு மீண்டும் கொரோனா!

 

தென் கொரியாவில் குணமடைந்த 116பேருக்கு மீண்டும் கொரோனா!

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 18லட்சத்து 64ஆயிரத்து 555  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு வரும் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தென்கொரியாவில் சில மாதங்களுக்கு முன்பு வீரியமாக இருந்த கொரோனா வைரஸ், அந்நாடு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் படிப்படியாக குறைய தொடங்கியது. கொரோனா வைரசிலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருக்கும் நிலையில், அவர்களில் சிலருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

coronavirus

இந்நிலையில், தென் கொரியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 116 பேருக்கு மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை; உடலில் செயலிழந்த வைரஸ் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்திருக்கலாம்  என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.