தென்மேற்கு பருவ மழை ஆரம்பம்: கேரளாவுக்கு ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 

தென்மேற்கு பருவ மழை ஆரம்பம்: கேரளாவுக்கு ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை முதல் தொடங்கவிருப்பதால்  நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளா: கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை முதல் தொடங்கவிருப்பதால்  நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாகத் தென்மேற்கு பருவ மழை  ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும்.அனால் இந்த முறை ஆறுநாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. வெயிலின் தாக்கத்தில் சிக்கி அவதிப்பட்டு  வந்த மக்கள், தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.  

rain

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,  தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது என்றும் மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது’ என்றார். அதன்படி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.  நாளை முதல் அங்கு மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால்  கேரளாவில் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இந்த நான்கு  மாவட்டங்களுக்கும்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

rain

இது தவிர திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.